இன்று தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் சிறப்பாக தொடங்கியிருக்கிறது. மக்கள் பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக வால்பாறையிலிருந்து கோவை, திருப்பூர், சேலம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பணிக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்ல முற்பட்டபோது குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிகப்படியான மக்கள் செல்லவுள்ளதால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.