திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல ஆண்களை மேட்ரிமோனியல் மூலம் மோசடி செய்ததாக நடிகை சுருதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகை சுருதி குறித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இது குறித்து நடிகை சுருதி கோவை சைபர் காவல் துறையினரிடம் புகார் அளிக்க வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேட்ரிமோனியல் மோசடி வழக்கில் தன்னை வலிமையாக்க என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் தவறாக அருவருக்கத்தக்க கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தன்னால் சாதாரண இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க முடியவில்லை என்றும், இது குறித்து மனித உரிமைகள், ஆணையம், பிரதமர் மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறினார்.