ETV Bharat / state

பல்கலைக்கழக கேட்டுக்குள் புகுந்து அரிசியை ருசித்து சென்ற காட்டு யானை - பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள்

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு, அரிசியை எடுத்து சாப்பிட்டது. பின் வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர்.

பல்கலைக்கழக கேட்டுக்குள் புகுந்த காட்டுயானை...அரிசியை ருசித்து சென்றது

author img

By

Published : Sep 7, 2022, 10:21 AM IST

கோவை: மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் நாள்தோறும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம். தற்போது மருதமலை வனப்பகுதியில் 16 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 14 யானைகள் ஐஓபி காலனி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்தது இதனை அடுத்து வனத்துறையினர் அந்த யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பல்கலைக்கழக கேட்டுக்குள் புகுந்த காட்டுயானை...அரிசியை ருசித்து சென்றது

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்தது வளாகம் முழுவதும் சுற்றி வந்தது. பின் பல்கலைக்கழக வாயிலில் உள்ள காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு, மற்றும் அரிசியை எடுத்து சாப்பிட்டது.

இது குறித்து அங்கிருந்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அந்த யானையை சத்தம் எழுப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினார்.

இதையும் படிங்க: ‘தலைவன் ஒருவன் தான் என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்’ - சசிகலாவுடன் ஈபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை முயற்சி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.