ETV Bharat / state

டாஸ்மாக் பீர் பாட்டிலில் குப்பை.. மதுப்பிரியர்கள் ஷாக்! - Tasmac Beer Garbage

கோவை காந்திரபுரம் அருகே இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் குப்பை, தூசு இருந்ததாக மதுப்பிரியர்கள் புலம்பும் வீடியோ வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் பீர் பாட்டிலில் குப்பை
டாஸ்மாக் பீர் பாட்டிலில் குப்பை
author img

By

Published : Jan 28, 2023, 8:19 PM IST

டாஸ்மாக் பீர் பாட்டிலில் குப்பை

கோயம்புத்தூர்: காந்திபுரம் கிராஸ்கட் சாலை 9வது வீதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மாநகரின் கிராஸ்கட் சாலையின் மையப் பகுதியில் உள்ளதால், இங்கு மது விற்பனை அதிகமாக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோர், கட்டிடத் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கி விட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.

இதனால் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோவை பெரிய கடை வீதி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர், இக்கடையில் பிரபல தனியார் பீர் ஒன்றை வாங்கியுள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலைப் பார்த்த போது, அதில் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கூறுகையில் "விலை கொடுத்து வாங்கிய பீரில் தூசிகள் இருந்தது குறித்து முறையிட்டதற்கு அலட்சியமாக ஊழியர்கள் பதில் அளித்தனர். மேலும் இதை மாற்றித் தரவும் மறுத்ததால் தனக்கு 200 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது" என்று வேதனையுடன் கூறினார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஓர் 'கூகுள் குட்டப்பா'; பள்ளி மாணவன் கண்டுபிடித்த சூப்பர் ரோபோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.