கோவை: அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்கள் உள்ளனர்.
எனினும், பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார்.
அதில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும்; குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக்கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நூதன முயற்சியால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை. முதற்கட்டமாக 4 வார்டுகளில் மட்டுமே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப்பணி தொடரும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:திமுகவில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு