கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் செந்தில்வேல், செல்வி தம்பதியரின் மகள் தனுவர்ஷா. தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை நுண்ணுயிரியல் படித்து வரும் இவர், ஆறு வயதிலிருந்தே இரண்டு கைகளிலும் எழுதும் பழக்கமுடையவர்.
இந்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு கைகளிலும் எழுதுவதற்கு பழக வேண்டும் என்ற ஆர்வத்தில் சில ஆண்டுகளாக அதற்கான பயிற்சியையும் தொடங்கியுள்ளார். தற்போது மாணவி தனுவர்ஷா இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதுவதிலும் ஓவியம் வரைவதிலும் அசத்தி வருகிறார்.
மேலும் இவர், தன்னுடைய திறமை குறித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு என்ற நிறுவனத்தில் இணையம் வழியாக விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அதில் வெற்றி பெற்று சாதனை பட்டியலில் இடம்பெறுவேன் என்றும் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
இதையும் படியுங்க: