ETV Bharat / state

அரசியலில் களமிறங்கியுள்ள 21வயது கல்லூரி மாணவன்!

author img

By

Published : Dec 24, 2019, 3:27 PM IST

கோவை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவையைச் சேர்ந்த  21 வயதான கல்லூரி மாணவர் கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக போட்டியிடுகிறார்.

nagarajan
nagarajan

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி நிறைவடைந்தது.

ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேட்சைகள் என ஏராளமனோர் ஆர்வமுடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பளர்கள் அதிகளவில் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம், நீலாம்பூர் கிழக்கு வீதியைச் சேர்ந்த நாகர்ஜுன் (21) என்ற கல்லூரி மாணவர் அப்பகுதியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த அவர் தற்போது சித்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் இதழியல் முதலாமாண்டு படித்து வருகிறார். தற்போது அரசியலில் இளம் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அரசியலில் களமிறங்கியுள்ள கல்லூரி மாணவன்

இது குறித்து வேட்பாளர் நாகர்ஜுன் கூறுகையில், 'ஆரம்பம் முதல் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை தயாரித்துவருகிறேன். இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் குறித்து தெரிந்துகொண்டேன். அதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன். தேர்தலில் வெற்றிபெற்றால் எனது வார்டில் அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம், மக்கள் குறைகளை சொல்ல புது செயலி, சுகாதாரத்தை மேம்படுத்துதல் என தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளேன். மேலும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் சாலைகள் அமைக்க முயற்சி மேற்கொள்ள உள்ளேன்' என்றார்.

அந்த வார்டில் நாகார்ஜுன் உள்பட 2 பேர் போட்டியிடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இளம் வயது வேட்பாளர் என்ற பெருமையோடு நாகர்ஜுன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இளம் வேட்பாளராக நாகர்ஜுன் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் படித்தோம், வேலைக்கு சென்றோம் என உள்ளனர். இந்நிலையில் நம்மை சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாகர்ஜுன் தேர்தலில் போட்டியிடுவது பெருமையாக உள்ளது. மற்றவர்களை காட்டிலும் நாகர்ஜுன் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய இளைஞர். நாகர்ஜுன் தேர்தலில் வெற்றிபெற்றால் தங்கள் பகுதிக்கு தேவையான வசதிகளை உரிமையோடு கேட்டுப் பெறலாம். இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமானது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆட்டோ டிரைவரின் மகள் அசத்தல் சாதனை! 0.53 வினாடிகளில் தேசிய சாதனை முறியடிப்பு!

Intro:ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டி, 21 வயதான நாகர்ஜுன் நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக போட்டியிடுகிறார்

Body:தேர்தலில் வாக்களிக்க 18 வயது போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும் அதன்படி கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 21-வது வயதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார் கோவை நீலாம்பூர் கிழக்கு வீதியைச் சேர்ந்த செந்தில்குமார்_ரமா பிரபா தம்பதியினரின் மகன் நாகர்ஜுன் 17 _6_1998 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த அவர் தற்போது சித்ரா பகுதியில் உள்ள கல்லூரியில் இதழியல் முதலாமாண்டு படித்து வருகிறார் இவர் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நீலாம்பூர் கிராம ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிடுகிறார். அந்த வார்டில் நாகராஜன் உட்பட இரண்டு பேர் போட்டியிடுகின்றனர் அவருக்கு அப்பகுதி மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இதுகுறித்து வேட்பாளர் நாகர்ஜுன் கூறுகையில் ஆரம்பம் முதல் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருவதாகவும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார் இதன் காரணமாக தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் இதன் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக தெரிவித்தார் தான் வெற்றிபெற்றால் தனது வார்டில் அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன், மக்கள் குறைகளை சொல்ல புது செயலியை உருவாக்கி அதன் மூலம் அந்த குறைகளை கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து இயற்கை உரம் சாலைகள் அமைக்க தான் முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இளம் வேட்பாளராக நாகர்ஜுன் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மற்றவர்களை காட்டிலும் சுறுசுறுப்பாக இயங்க கூடிய நாகர்ஜுன் வெற்றிபெற்றால் தங்கள் பகுதிக்கு தேவையான வசதிகளை கேட்டுப் பெறலாம் என கூறியவர்கள் இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமானது என தெரிவித்தனர்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.