கோயம்புத்தூர்: கோவையில் நேற்று முன்தினம் ஆலாந்துறை பூலுவாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினரின் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து பாஸ்கரன் மீது ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலக ஊழியர்கள் அனுமதியை மீறியும்; முகக்கவசம் அணியாமலும் அச்செயலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து பாஸ்கரனை கைது செய்து சத்தியமங்கலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து பாஜகவினரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதையும் படிங்க:கருணாநிதி போட்டோ மாட்டுவீங்க... மோடி போட்டோ வைக்க மாட்டீங்களா...?வீடியோ வைரல்