கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மக்கினம்பட்டி செல்வகணபதி நகரைச் சேர்ந்த கணேசன் கட்டட தொழிலாளி, 2 நாள்களுக்கு முன்பு திருநள்ளாறு கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
திருநள்ளாறு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 சவரன் நகை ரூ 5,000 பணம் திருடு போயுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து கணேசன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் காவல் துறையினர் அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பர்தா அணிந்து நகை கொள்ளை - 4 மணி நேர இடைவெளியில் நடந்த துணிகரம்