தமிழ்நாட்டில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதற்கு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்திருந்தது.
இருந்தபோதிலும், பல்வேறு இடங்களில் நெகிழிப் பைகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொது மக்கள் அரசு அலுவலர்களிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, கோவை அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வணிக நிறுவனங்கள், பூக்கடைகள் ஆகிய இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதிகளில் 50 கிலோ வரை நெகிழிப் பைகளை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடைகள், நிறுவனங்கள் ஆகியவை மீது அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி நீதிமன்றத்தில் 'தர்பார்' படத்தின் மீது அவதூறு வழக்கு