கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, நான்கு பேர் சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக வனத்துறையினர், அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அவர்களின் பெயர் வீரையன், வேலன், வெள்ளியங்கிரி, சின்னராஜ் என்பதும் சில நாட்களாக கள்ளச்சாராயம் காய்ச்சி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்ததற்காக தலா 4 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.16 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், சாராயம் காய்ச்ச உபயோகிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், நால்வரையும் மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!