ETV Bharat / state

தனியார் விடுதியில் பலியல் தொழில்: பெண்கள் இருவர் உள்பட 4 பேர் கைது! - காவல்துறையினர் விசாரணை

கோயம்புத்தூர்: சூலூர் அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெங்களூரைச் சேர்ந்த பெண்கள் இருவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

4 arrested for prostitutions work in private hotel

author img

By

Published : Nov 24, 2020, 10:24 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் டேவிட் மஹாராஜா என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் ஜோடியாக வருபவர்களுக்கு ஒருமணி நேரம் தங்க ரூ. 500 என்ற அளவில் வாடகைக்கு விடப்படுகிறது.

மேலும் அங்கு பாலியல் தொழில் நடப்பதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சூலூர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான காவல்துறையினர், விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விடுதி அறைகளில் இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பகவதிராஜ்(25), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யனார்(27) ஆகியோர், பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்த்து.

இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரிக்கையில், விடுதி உரிமையாளர் டேவிட் மஹாராஜா ஏற்பாட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. டேவிட் மஹாராஜா தலைமறைவான நிலையில் பெண்கள் இருவர் உள்பட 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர், பகவதிராஜ், அய்யனாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக எம்பி வீடு முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.