கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சரவணன் - இந்திராணி தம்பதியினர் ஆர்த்தி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திராணி கடையில் இருந்தபோது, இரண்டு இளைஞர்கள், ஒரு பெண் கடைக்கு வந்து இந்திராணியிடம் 3 மில்லிகிராம் தங்க நகையை கொடுத்து உள்ளனர்.
மேலும், எங்களிடம் 2 கிலோ தங்கம் இருப்பதாகவும் ரூ.1 லட்சம் கொடுத்தால் அதை கொடுப்பதாகவும் இந்திராணியிடம் அவர்கள் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பி, இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்திராணி அந்த கும்பலிடம் ரூ.1 லட்சம் கொடுத்து, 2 கிலோ தங்க செயினைப் பெற்றுள்ளார். இதையடுத்து, இந்திராணி அருகில் உள்ள தங்க நகை கடைக்குச் சென்று செயினை சோதனை செய்தபோது, அது தங்கம் இல்லை என்பதும்; 2 கிலோ அலுமினியம் என்பதும், 3 மி.கி., மட்டுமே தங்கம் என்பதும் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த இந்திராணி இது குறித்து பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதத்தை மறைத்து திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் பரபரப்பு புகார்!