ETV Bharat / state

ஊரை சூறையாடும் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டம்!

Coimbatore Elephant: கோவையில் மக்னா யானையைப் பிடிக்க கும்கி யானைகளான சின்னத்தம்பி, கலீம், முத்து ஆகியவற்றின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 23, 2023, 7:58 AM IST

140 கி.மீ. பயணித்த மக்னா யானை! விரட்ட 3 கும்கி யானைகள் வரவழைப்பு

கோவை: விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி, தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த ஐந்தாம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனையடுத்து, ஆறாம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை அங்கிருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி வந்த நிலையில் செவ்வாய் கிழமை காலை அங்கிருந்து ஆத்து பொள்ளாச்சி, வடக்கிபாளையம், கிணத்துக்கடவு வழியாக சுமார் 140 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மதுக்கரை வந்தடைந்தது.

இதனை அடுத்து அங்கிருந்து குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கல்லூரி பின்புறம் உள்ள புதரில் தஞ்சமடைந்தது. பின்னர் அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் தென்னந்தோப்பில் புகுந்த மக்னா யானை பயிர் சேதங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த யானையை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சிக்குள் யானை தொடர்ந்து சுற்றி வருவதால் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிக்கு உதவியாக டாப்சிலிப் கும்கி யானைகள் முகாமில் இருந்து கலீம், சின்னத்தம்பி, முத்து ஆகிய மூன்று கும்கி யானைகள் கோவை கொண்டுவரப்பட உள்ளது.

இந்த யானைகள் வந்தவுடன் இன்று காலை அல்லது மாலைக்குள் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஓசூர் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மருத்துவர் விஜயராகவன் கோவை வனத்துறை மருத்துவர் சுகுமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழு தயாராக உள்ளனர்.

இதனிடையே குனியமுத்தூர் பகுதிக்குள் புகுந்துள்ள மக்னா யானை இரவு முழுவதும் அங்கும் இங்கும் உலாவியது. பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட சுற்று சுவர்களை இடித்துவிட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை உலா வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. யானையை மீண்டும் வனத்திற்குள் விரட்ட வன ஊழியர்கள் கடும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: Coimbatore Elephant: ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மக்னா யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.