ETV Bharat / state

துப்பாக்கியைக் காட்டி மதுபாட்டில்கள் பெற்ற 3 கேரள இளைஞர்கள் கைது - Kerala youths arrested in Tamil Nadu

Kerala youths arrested: கோவை மாவட்டம் அருகே டாஸ்மாக் பாரில் இருந்த ஊரியர்களிடம் துப்பாக்கியை காட்டி மது பாட்டில்களை பறித்துச் சென்ற மூன்று பேரை க.க.சாவடி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மது பாட்டில்கள் வாங்கிய இளைஞர்களை கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 11:07 PM IST

கோவை: கோவை எட்டிமடை அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் பார் மீண்டும் திறக்க ஒப்பந்தம் கோரப்பட்டதால், டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று பேர் தினமும் டாஸ்மாக்கிலே தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் டிச.10 அன்று அதிகாலை 3 மணியளவில் காரில் வந்த மூன்று பேர் பாரில் இருந்த ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி மதுபாட்டில்களை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மாக் ஊழியர்கள் க.க.சாவடி போலீசாரிடம் புகார் அளித்தனர்.

வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய க.க.சாவடி போலீசார், அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

முதல்கட்டமாக, பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிச்சென்ற மர்ம நபர்களின் செல்போன் சிக்னல் மற்றும் கார் எண்ணை வைத்து கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் பதுங்கியிருந்த கார் உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த பெலோமின் ராஜின் மகன் விபின் ஆரோக்கியம் (21) என்பதும், இவர் டிப்பர் லாரி ஓட்டுநராக இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், இவர் சம்பவத்தன்று அவரது நணபர்களான அர்ஜூன்(23) மற்றும் சுதீஸ் (21) ஆகிய இருவருடன் சேர்ந்து காரில் மது வாங்க தமிழ்நாடு எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளை தேடி வந்ததாகவும், அப்போது எட்டிமடை பகுதியில் மூடி இருந்த டாஸ்மாக் பாரில் இருந்த ஊழியர்களிடம் ஏர் கன் வகை (AIR GUN) துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மதுபாட்டில்களை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து விபின் வீட்டில் இருந்த துப்பாக்கி (ஏர் கன்) மற்றும் காரை போலிசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாளையாறு தனியார் பாரில் பதுங்கியிருந்த அர்ஜூன் மற்றும் சுதீஸையும் போலீசார் இன்று (டிச.12) கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: விரைவில் திறப்புக்கு தயாரான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. முதற்கட்டமாக 100 பேருந்துகள் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.