ETV Bharat / state

எனது துறையில் லஞ்சம் இல்லை - அமைச்சர் பெருமிதம் - Games for Forest Department

கோவை: லஞ்சம் இல்லாத துறையாக வனத்துறை இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Games for Forest Department
25th State Level Games for Forest Department in Coimbatore
author img

By

Published : Feb 8, 2020, 1:03 PM IST

வனத்துறைக்கான 25ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவை வனக் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடக்கி வைத்தார். இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு, மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, விளையாட்டு வீரர்களின் சார்பில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு வனத்துறையைச் சேர்ந்த 900 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர், மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் ஒடிசாவில் நடக்கும் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வனவிலங்குகளால் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ. 32 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பணியாற்றிய 10 வன ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ”உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இனி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும். வன சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக வனக்காப்பாளர்கள் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

25 வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு திறமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாத துறையாக வனத்துறை உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: காலணியை கழற்ற சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர்

Intro:லஞ்சம் இல்லாத துறையாக வனத்துறை இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்

Body:கோவையில் வனத்துறைக்கான 25 வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவை வனக்கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கியது இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துவக்கி வைத்தார் இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வனத்துறை ம தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மண்டல தலைமை வனப் பாதுகாவலர் தெபாஸ் ஜனா மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக விளையாட்டு வீரர்களின் சார்பில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது இதில் தமிழக வனத் துறையைச் சேர்ந்த 900 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த வீரர் வீராங்கனைகள் ஒடிசாவில் நடக்கும் அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் இந்நிகழ்ச்சியில் வனவிலங்குகளால் உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு 32 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது மேலும் சிறப்பாக பணியாற்றிய 10 வன ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது இதேபோல் இனி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தான் வெற்றி பெறும் வன சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக வனவர்கள் வனக்காப்பாளர்கள் என 2000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு திறமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாத துறையாக வனத்துறை உள்ளது என பெருமிதம் தெரிவித்தார் மேலும் அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.