கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பால சுப்பிரமணியம் (62). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவரது வீட்டின் முன்னிபிருந்த சந்தன மரத்தை நான்கு பேர் கொண்ட கும்பல், நேற்று முன்தினம் நள்ளிரவு வெட்டியுள்ளனர். இதையடுத்து பாலசுப்ரமணியத்தின் எதிர் வீட்டில் வசிக்கும் இதயம் நாபிக் என்பவர் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே வந்துள்ளார். பின்னர் அவர் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சத்தம் போட்டதால் அவர்கள் சந்தன மரத்தின் ஒரு பகுதியை எடுத்து விட்டு, இரண்டு பகுதிகளை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.
இதையடுத்து இதயம் நாபிக், குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின் அங்கு வந்த காவல் துறையினர் இரவு முழுவதும் அப்பகுதி முழுவதும் சோதனையிட்டனர். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
இது குறித்து இதயம் நாபிக் கூறும் போது, தொடர்ந்து இந்தப் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாகவும் அதனை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இரவில் வந்த கும்பல் பெரிய அளவு கத்திகளை வைத்திருந்ததாகவும், சத்தம் கேட்டதும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னம் அருகே இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை!