ETV Bharat / state

கடையை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை! - etv news

அன்னூரில் டாஸ்மாக் மதுபானக் கடையை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை திருடிச் சென்ற அடையாள தெரியாத நபர்களை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுபான கடையை உடைத்து 2 லட்சம் கொள்ளை!
மதுபான கடையை உடைத்து 2 லட்சம் கொள்ளை!
author img

By

Published : May 28, 2021, 10:20 PM IST

கோவை மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த காக்காபாளையம் பகுதியில் 1542 என்ற அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. தற்போது, கரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று (மே.28) காலை அவ்வழியாகச் சென்றவர்கள் டாஸ்மாக் மதுபானக் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கடையை சோதனை நடத்தியதில், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், கண்காணிப்புக் கேமராவின் ஹார்ட் டிஸ்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் துயர்துடைப்பு நிதி - சீமான் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.