கோவை மாவட்டத்திலிருந்து 139 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 134 பேர் கோவை மாவட்டத்தையும், மீதமுள்ள 5 பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து தற்போது மாவட்டத்தில் மொத்த நோய் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 183ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து ஒரே நாளில் 73 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மொத்தம் 901ஆக உள்ளது.
கரோனா பாதிப்பால் 70 வயது முதியவர், 80 வயது பெண் என இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சைப் பெற்று வந்தவர்கள். மேலும், மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு காலத்திலும் தாய்ப்பால் தானம்: வியக்க வைக்கும் அமிர்தம் அமைப்பினர்!