கோவை: கணபதி பகுதி மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினகரன். இரும்பு வியாபாரியான இவர், சில நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு நேற்றிரவு திரும்புகையில், வீட்டின் முதல் தளத்தில் இருந்த கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த இரும்புப் பெட்டகம் உடைக்கப்பட்ட அதில், வைத்திருந்த 131 பவுன் தங்க நகைகளை கொள்ளைபோயிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்குத் தடயவியல் வல்லுநர்களுடன் வந்த காவலர்கள் கதவு, இரும்புப் பெட்டகங்களில் பதிவான கைரேகைகள், அங்கு இருந்த தடயங்களைப் பதிவுசெய்தும் வீட்டைச் சுற்றியுள்ள முக்கியத் தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களைக் கொண்டும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் நடந்த மக்கள் குறைதீர் முகாம் - நேரடியாக களம்கண்ட கலெக்டர்