ETV Bharat / state

பொல்லாதவன் பட பாணியில் திருடு போன இருசக்கர வாகனத்தை நண்பரோடு சேர்ந்து கண்டுபிடித்த யூடியூபர்!! - சைபர் கிரைம் போலீசார்

பொல்லாதவன் பட பாணியில் யூடியூபர் பாண்டிச்சேரியில் திருடு போன இருசக்கர வாகனத்தை நண்பரோடு சேர்ந்து கண்டுபிடித்த சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 31, 2023, 6:30 PM IST

பொல்லாதவன் பட பாணியில் திருடு போன இருசக்கர வாகனத்தை நண்பரோடு சேர்ந்து கண்டுபிடித்த யூடியூபர்!!

புதுச்சேரி: டி ஸ்கொயர் விலாக் என்ற பெயரில் யூடியூப் சேனல் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள உணவுக் கடைகளை தேடிச் சென்று புதுப்புது உணவுகள் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருபவர் தேவராஜ். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி பாண்டிச்சேரியில் உள்ள முருகா இன் என்ற ஓட்டலுக்கு சென்ற போது தனது விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டல் வாசலில் நிறுத்தி வைத்துள்ளார்.

வாகனத்தை சாவியுடன் நிறுத்தி வைத்திருந்ததால் மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடிச் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பெரிய கடை காவல் நிலையத்தில் யூடியூபர் புகார் அளித்து விட்டு சென்றுள்ளார். சில மாதங்கள் கழித்து திடீரென சென்னை அடையாறு பகுதியில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று தேவராஜிற்கு வந்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை அடிப்படையாக வைத்து தனது இருசக்கர வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் யூடியூபர் தேவராஜன் ஈடுபட்டார். கையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு, திருடி சென்ற நபர் அடையாறு வழியாக இருசக்கர வாகனத்தை கொண்டு சென்று போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபட்டதை அறிந்த தேவராஜ், அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் சென்று விசாரணை செய்துள்ளார்.

குறிப்பாக விவரங்களை போலீசாருக்கு தெரிவித்து, அபராதம் விதிக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஓட்டுனரின் லைசென்ஸ் எண் ஆகியவற்றை சென்னை அடையாறு போக்குவரத்து போலீசாரிடமிருந்து பெற்றுள்ளார். பின்னர் ஓட்டுநர் உரிமம் பூந்தமல்லியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பெறப்பட்ட காரணத்தினால், அங்கு சென்று ஓட்டுநர் உரிம நம்பரை பயன்படுத்தி திருடனின் முகவரி குறித்து விசாரணை செய்துள்ளார்.

தனது நண்பர் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை பார்க்கிற காரணத்தினால் ஓட்டுநர் உரிமை நம்பரை வைத்து திருடிய நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

விழுப்புரத்திற்கு சென்று பைக் திருடனை பிடிக்க முயன்ற போது அங்கு அவன் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு யூடியூபர் தேவராஜ் விழுப்புரத்தில் உள்ள திருடனின் வீட்டிற்குச் சென்று வங்கியில் இருந்து வருவதாக கூறி நாடகமாடியுள்ளார். குறிப்பாக திருடனின் பெற்றோர்களிடம் இருசக்கர வாகனத்திற்கான மாத இஎம்ஐ கட்டவில்லை எனக் கூறி திருடனை பற்றிய முழு விவரத்தையும் பெற்றுள்ளார்.

விசாரணை செய்ததில் விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற நபர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த தகவலை பாண்டிச்சேரியில் உள்ள பெரிய கடை காவல் நிலையத்தில் யூடியூபர் தேவராஜ் தெரிவித்ததை அடுத்து, இருசக்கர வாகன திருடன் ஆன சதீஷை போலீசார் தேடிவந்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இருப்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கண்டறிந்து பாண்டிச்சேரி போலீசார் சதீஷை சுற்றி வளைத்து கைது செய்து, அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணை செய்ததில் கடலூரில் இருந்து சென்னை செல்லும் போது பாண்டிச்சேரியில் முருகா இன் ஓட்டலில் சாவியுடன் இருந்ததால் திருடி சென்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். யூடியூபர் தேவராஜ் இருசக்கர வாகனத்தை தானே விசாரணை செய்து கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் திருடனையும் காவல்துறையிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தை நாடி இரு சக்கர வாகனத்தையும் திரும்பப் பெற்றுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் காரணமாக தன்னுடைய செல்போன் எண்ணிற்கு வந்த அபராதம் குறித்த குறுஞ்செய்தியை வைத்து தானே விசாரணை செய்து திருடனையும் பைக்கையும் மீட்ட சம்பவம் உள்ளிட்டவற்றை தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இல்லாத யுனிவர்சிட்டிக்கு ரூ.18 லட்சம் பீஸ்.. சென்னை பெண்ணிடம் நூதன் மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.