ETV Bharat / state

ரயில் நிலையத்தில் அடாவடி - பயணிக்கு பலத்த காயம்!

சென்னை புறநகர் மின்சார ரயில் மீது ஏறி அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பயணி ஒருவர் முகத்தில் பட்டு தாடை கிழிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

author img

By

Published : Mar 29, 2023, 10:36 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை : புறநகர் மின்சார ரயில் மீது ஏறிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கற்களைக் கொண்டு எறிந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அவ்விடத்தில் நின்று இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் முகத்தில் கற்கள் பட்டது. இந்த நிலையில் அந்த இளைஞருக்கு தாடை கிழிந்தது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட ரயில்வே காவல் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் நின்னகரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், கௌதம் (26). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று ( மார்ச் 29 ) வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு காலை வீட்டிற்கு புறப்பட்ட கவுதம், சென்னை பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்தில் தாம்பரம் மார்க்கமாக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறிச் சென்றுள்ளார்.

இதையடுத்து மின்சார ரயில் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கும் சானிடோரியம் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்று கொண்டு இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் மீது கற்கொலை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: நகைக்கடை ஊழியர்களைத் தாக்கி 3 கிலோ தங்க நகைகள் கொள்ளை? - போலீஸ் தீவிர விசாரணை

அப்போது ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கௌதம் மீது கற்கள் விழுந்ததில் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து உள்ளது. மேலும் அதே பெட்டியில் இருந்த ரயில்வே காவல் துறையினர் மீதும் கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சானிட்டோரியம் ரயில் நிலையம் சென்ற பின் கௌதமை ரயில்வே காவல் துறையினர் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் ரயில் மீது கற்களை எறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செல்லும் மின்சார ரயில் மீது கற்கள் மற்றும் கட்டையால் பயணிகளை தாக்கி செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து சென்றவரை கட்டையால் அடித்துக் கீழே விழுந்ததில் கால் துண்டான சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

எனவே, ரயில் மீது கற்கள் மற்றும் கட்டையால் பயணிகளைத் தாக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லி வீதிகளில் கூலிங் கிளாஸுடன் கூலாக உலா வரும் அம்ரித் பால் சிங்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.