ETV Bharat / state

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இளைஞர்கள் முன்னேற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Mar 14, 2023, 7:22 PM IST

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும், நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை வர்த்தக மையத்தில், இன்று (14.3.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 50வது மாநாட்டை தொடங்கி வைத்தார். 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய தமிழ்நாட்டின் பரந்த மனித வளத்தைத் ஆயத்தப்படுத்தும் நோக்கத்துடன், அரசுப் பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

உலகெங்கிலும் உள்ள மனிதவள மேம்பாட்டு நடைமுறைகள் சார்ந்த கலந்துரையாடல்களின் மூலம் தமிழ்நாட்டின் மனித வளத்தை பொருளாதார வெற்றிக்கான ஆற்றலாய் மாற்றுவதற்கான கூறுகளை கண்டறிய இம்மாநாடு வழிவகை செய்யும். தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம் பல்வேறு அரசு துறைகளுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கிடையே வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், 6,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு IT, ITeS, Banking Financial Service & Insurance, சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புடைய திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ”இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பத்தினுடைய யுகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மனிதரின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக தொழில்நுட்பப் பொருட்கள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. செல்போன், கம்ப்யூட்டர், இன்டெர்நெட் போன்றவை நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

தொழில்நுட்பம், இன்று உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. உலகில் எங்கோ ஒரு முனையில் நடக்கும் சம்பவங்கள், இன்னொரு முனைக்கு அப்போதே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய பயன்பாடு கல்வித்துறையில் தான் இருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி அறிவை நாம் தேடிப் பெற்றோம். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கல்வி விரல் நுனியில் வந்துவிட்டது. மேலும் வகுப்பறைகள் நவீனமயமாகிவிட்டன.

கையளவு செல்பேசியில் அனைத்துப் புத்தகங்களும் நமக்குக் கிடைக்கின்றன. மாணவர்கள் அறிவோடு மட்டுமல்ல, அறிவியலோடும் இன்றைக்கு கற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நோய் தடுக்கும் முறை, கண்டறியும் முறை, காக்கும் முறை என எல்லாமே இப்போது எளிமையாக வந்திருக்கிறது. தனிமனித பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தொழில்நுட்பம் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பம் பல பிரம்மிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியது எல்லாம், இப்போது உண்மையாக வந்து கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான, அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்பையும், மனித ஆற்றலையும் தமிழ்நாடு முழுமையாகக் கொண்டுள்ளது. இதை நன்கு பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழுப் பயன்கள் சென்று சேர்ந்திடவும், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.

மருத்துவம், கல்வி, வேளாண்மை மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இந்தத் துறையின் அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை, வாழ்த்துகளை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தகவல் தொலைத் தொடர்பு சார்ந்த தேசிய மின் ஆளுமைத் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு மின் ஆளுமைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் சார்பில் உயர் கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து வருகிறது. 2009-ஆம் ஆண்டு கழக ஆட்சியில் தான் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICTACT) தொடங்கப்பட்டது. ஆசிரியர் மேம்பாடு, மாணவர் திறன் மேம்பாடு, இளைஞர் மேம்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, தொழில்-நிறுவன ஆராய்ச்சி, ஆய்வு இதழ் வெளியீடுகள் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனத்தின் செயல்பாடு உள்ளபடியே பாராட்டுக்குரியது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில், அதன் வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அதை விரைவுபடுத்தவும் தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பொருளாதார வளம், அதிகரித்த வேலைவாய்ப்பு என இரட்டைப் பலன்களை அடைய முடியும். ஐடி உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் மற்றும் மாநில குடும்ப தரவுத் தளம், பிளாக்செயின் மற்றும் இ-அலுவலகம் மூலம் SMART நிறுவனத்தை நிறுவுவதன் மூலமாக சேவைகளை மேம்படுத்திட இயலும் என்பதால், தமிழ்நாடு அரசு அதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

இதன்மூலம் குடிமக்கள் விரைவில் காகிதமில்லா, வெளிப்படைத் தன்மையுடனான சேவைகளை பெற இயலும்.“தரவுகள்” எனப்படும் “Data”தான் இந்தக் காலத்தின் புதிய எரிபொருள். தமிழ்நாடு Data Centre பாலிசியை வெளியிட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் Date Centre உட்கட்டமைப்பை உருவாக்க உதவும் முதல் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், துடிப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிட, திறன் இடைவெளியைக் குறைப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதனை உணர்ந்து தான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மூலமாக, அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் ஐ.பி.எம். ஆகியவற்றின் மூலமாக 50 ஆயிரம் ஐ.டி. / கணினித் துறை மாணவர்களுக்கு 3-கிரெடிட், கட்டாயக் கற்றல் படிப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பயிற்சியை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தகவல் தொழில் நுட்பத்திற்கு - இரண்டு பக்கம் உண்டு. அதனை எப்படி, எந்தளவுக்கு, எந்த நோக்கத்துக்கு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே அதனுடைய பயன்கள் இருக்கும்.

இளைய தலைமுறை தங்களது வளர்ச்சிக்கு இதனை பயன்படுத்த வேண்டுமே தவிர, தொழில் நுட்பங்களின் அடிமைகள் ஆகிவிடக் கூடாது. தொழில் நுட்பங்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. வதந்திகளைப் பரப்பி சட்டம் ஒழுங்கை கெடுக்கவும், இதனை சில அரசியல் சக்திகள் பயன்படுத்துகிறார்கள். ஆபாச வலைத்தளங்களும் பெருகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மனித உயிர்களை நித்தமும் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும். அனைத்துத் துறை வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் கொள்கைக்கு இந்த கருத்தரங்கு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்தார். இம்மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.