ETV Bharat / state

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்... பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - Car accident CCTV footage

சென்னை: வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளனாதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Car accident CCTV
Car accident CCTV
author img

By

Published : Dec 11, 2019, 7:54 AM IST

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன்(49). இவர் மருந்தகம் ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றிவந்தார்.

இந்நிலையில், நேற்று பணி முடிந்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார், நடேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு லோகநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்

இதனைக் கண்டதும் காரை ஓட்டி வந்த நபர் அங்கேயே காரை விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரம் அமைந்துள்ள கடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு!

Intro:குன்றத்தூரில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் 30 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி. கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு.

Body: சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன்(49), மருத்துவத்துறையில் சேல்ஸ் மேனாக வேலை செய்து வந்தார். இன்று வண்டலூரில் பணியை முடித்துவிட்டு வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே வரும்போது சர்வீஸ் சாலையோரம் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது சர்வீஸ் சாலையில் குன்றத்தூர் நோக்கி வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியதில் சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு லோகநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். Conclusion:இதனை கண்டதும் காரை ஓட்டி வந்த நபர் அங்கேயே காரை விட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது இந்த விபத்தை கண்டதும் அந்த கடையில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள். வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலையோரம் அமைந்துள்ள கடைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.