சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதிலுள்ள 8ஆவது தெருவில் வசித்து வருபவர் மலர்வண்ணன்(23). இவர் வீட்டிற்கு அருகே கேரம்போர்டு வைத்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் புதன்கிழமை கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தபோது டார்வின் என்ற நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் டார்வின் சிறிது நேரம் கழித்து குடித்துவிட்டு மலர்வண்ணன் வீட்டிற்கு சென்று அங்கே இருந்த அவரது சித்தி பிரபாவதி, சித்தப்பா முத்துசெல்வன், மலர்வண்ணன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகத் தெரிகிறது.
அதைத்தொடர்ந்து காயமடைந்த டார்வின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த டார்வின் மருத்துவரிடம் முறையாக பதிலளிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் தகராறில் ஈடுப்பட்ட டார்வினை கைது செய்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒன்றியம் மாறிய மூன்று வாக்குச் சீட்டுகள்: வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு!