சென்னை திருவான்மியூரில் உள்ள நியூ பீச் கடற்கரைக்கு 6 இளம் நண்பர்கள் நேற்று (ஆக. 27) சென்றனர். அவர்கள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி இரண்டு இளைஞர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
அதில் பென்ஸ்டன் என்ற வாலிபர் போராடி மீண்டும் கரைக்கு வந்த நிலையில், மற்றொருவர் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து அவரது நண்பர்கள் திருவான்மியூர் காவல் நிலையம், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அத்தகவலின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அனைவரும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் என்பதும், கடலில் மாயமான இளைஞர் பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மேத்யூ(18) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மீட்பு படையினர் மாயமான மேத்யூவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இதேபோல் மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற மூன்று இளைஞர்கள் மாயமாகி தற்போது வரை தேடப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.