ஆர்கேநகர் பகுதிக்குள்பட்ட தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (25). இவர் மதுபோதையில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மதில் சுவர் மீது அமர்ந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கால்வாயில் விழுந்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பந்து கால்வாயில் விழுந்து அதை எடுக்க வந்த நிலையில் கழிவுநீரில் இளைஞர் ஒருவர் மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, சம்பவயிடத்திற்கு வந்த ஆர்கே நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக அமைச்சர் சிடி வழக்கு: பெண்ணின் பெற்றோர் வாக்குமூலம் பதிவு!