ETV Bharat / state

சென்னை அருகே 40 சவரன் நகை, லேப்டாப் திருட்டு.. பலே திருடன் சிக்கியது எப்படி? - Valasaravakkam

சென்னை மடிப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை, 1.5 லட்சம் ரொக்கம் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிய நபரை கண்காணிப்பு கேமராவை வைத்து போலீசார் கைது செய்தனர்.

broke the lock of the house
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
author img

By

Published : Jul 11, 2023, 9:19 PM IST

பலே திருடன் சிக்கியது எப்படி?

சென்னை: மடிப்பாக்கம் ராம்நகர் வடக்கு ராம்குமார் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி(45). இவர் மருந்து நிறுவனம் ஒன்றில் தேசிய விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த (ஜூலை 1) ஆம் தேதி கந்தசாமி பணி நிமித்தமாக மும்பை சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்ள விருதுநகர் சென்றுள்ளனர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கந்தசாமியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். காலை அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் பெண் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

இத்தகவலின் பேரில் உரிமையாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக மடிப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்தனர். வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்து விட்டு 40 சவரன் தங்க நகை, 1.5 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக தனது புகாரில் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

மேலும், திருடு போன வீட்டில் சிசிடிவி கேமரா ஏதும் கிடைக்காத நிலையில் பரங்கிமலை துணை ஆணையர் மற்றும் தனிப்படை போலீசார் திருட வந்த மர்ம நபர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை வீட்டிலேயே விட்டு அங்கிருந்த சிகப்பு நிற இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றதை வைத்து மடிப்பாக்கத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்பு வளசரவாக்கம் சென்று கொள்ளையனை அவனது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், அவரிடமிருந்து 15 சவரன் தங்க நகை, 191 கிராம் வெள்ளி பொருட்கள், 1.10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைதான நபர் வளசரவாக்கத்தை சேர்ந்த சூர்யா(23) என்பதும் இவர் மீது கோயம்பேட்டில் ஒரு கொலை வழக்கும், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஆதம்பாக்கம், அண்ணா நகர் ஆகிய காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள இவனது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர், கைது செய்யப்பட்ட சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீடிப்பு சட்டவிரோதம்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.