சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் கண்காணித்தனர். அப்போது துபாய்க்கு சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முகமது உசேன் (30) வந்திருந்தார். அவரை அலுவலர்கள் சந்தேகத்தில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்த போது கைப்பையில் ரகசிய அறைகளில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்து இருந்ததை சங்கத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்தனா். அவற்றில் இருந்து கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனா்.
இது தொடர்பாக முகமது உசேனை சுங்க இலாகா அலுவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கூலிங் பீர் கேட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!