ETV Bharat / state

கோஷ்டி மோதல்: எட்டு ஆண்டுகள் குவைத்தில் தலைமறைவாக இருந்த இளைஞர் கைது - Kuwait Flights

கன்னியாகுமரியில் நடந்த கோஷ்டி மோதலில் சம்பந்தப்பட்ட இளைஞா், வெளிநாட்டில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துவிட்டு சென்னை வந்தபோது விமானநிலையத்தில் குடியுரிமை அலுவலர்கள் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Jul 24, 2021, 2:16 PM IST

சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு விமானம் ஒன்று நேற்று (ஜூலை 23) இரவு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட், ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்து அனுப்பினர்.

அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த தாதீயூஸ் (33) என்பவரின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது, கம்ப்யூட்டரில் தாதீயூஸ் கன்னியாகுமரி காவல்துறையினரால் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.

மேலும் இவா் மீது 2013 ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு கோஷ்டி மோதல்,கொலை மிரட்டல், அடிதடி சண்டை போன்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தாதீயூஸ்சை விமானநிலையத்திற்கு வெளியே விடாமல் அலுவலர்கள் அங்கிருந்த ஒரு அறையினுள் அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கோஷ்டி மோதல் வழக்கில், காவல்துறையினர் தன்னை கைது செய்துவிடுவாா்களோ என்ற பயத்தில் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாக தாதீயூஸ் தெரிவித்தார்.

குவைத்தில் கூலி வேலை செய்துவந்த தாதீயூஸ், 8 ஆண்டுகளாகிவிட்டதால், காவல்துறையினர் தனது வழக்குகளை மறந்திருப்பார்கள் எனக் கருதி சொந்த ஊருக்கு செல்ல குவைத்திலிருந்து விமானத்தில் சென்னை திரும்பியதாக தெரிவித்தார்.

தாதீயூஸ் வெளிநாட்டிற்கு தப்பியதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள் தாதீயூஸ் குறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலையடுத்து தாதீயூஸ்சை கைது செய்வதற்காக கன்னியாகுமரியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் சென்னை விமானநிலையத்திற்கு சென்றனர்.

இதையும் படிங்க: சரக்குகளைக் கையாள்வதில் சென்னை விமான நிலையம் சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.