ETV Bharat / state

13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு -  கைதானவர்கள் பகீர் வாக்குமூலம் - பாலியல் பலாத்காரம்

13 வயது மாணவியை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான நபர்களின் வாக்குமூலம் தெரியவந்துள்ளது.

Pocso act: 13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்

author img

By

Published : Mar 3, 2022, 6:32 AM IST

Updated : Mar 3, 2022, 10:26 AM IST

சென்னை: ராமாபுரத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாக வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த கல்லூரி மாணவர் வசந்த் க்ரிஷ் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமிக்கு ’ஹூக்கா’ எனும் போதைப் பொருள் கொடுத்து, பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.

மேலும், வசந்த் கிரிஷின் நண்பர்கள் சதீஷ்குமார், விஷால், உதவி பேராசிரியர் பிரசன்னா ஆகியோரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் அவர்களின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

தனது மகள் தவறான பாதைக்குச் செல்ல கல்லூரி மாணவி ஒருவர் காரணம் எனச் சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களின் காதலி மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட கல்லூரி மாணவி என 3 பெண்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 13 வயது சிறுமி படிக்கக் கூடிய அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த மாணவர் நண்பராக இருந்து வந்ததாகவும், தினமும் பானிபூரி சாப்பிடச் சிறுமி அவனது வீட்டுக்கு அழைக்கச் செல்லும் போது, அதே குடியிருப்பைச் சேர்ந்த வசந்த் கிரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர், வசந்த்கிரிஷ் சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடியை பெற்றுப் பேசி வந்துள்ளார், நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. சிறுமி, பாட்டியுடன் வசித்து வந்ததால் வசந்த்கிரிஷ் அதை தனக்குச் சாதகமாக மாற்றி, சிறுமியிடம் வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்வதாக இரவு நேரத்தில் காரில் நைட்அவுட் அழைத்துச் சென்று ’ஹுக்கா’ எனும் போதை பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், தினமும் சிறுமி காலையில் பள்ளிக்குச் செல்வதாகப் பாட்டியிடம் கூறிவிட்டு, வசந்த் கிரிஷ் வீட்டிற்கு வந்து போதைப்பொருள் அருந்துவதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. வசந்த் கிரிஷ் தனது நண்பர்களிடம் சிறுமி குறித்துக் கூறியதால் நைட் அவுட் எனக்கூறி சிறுமியை காரில் அழைத்து சென்று போதைப் பொருள் கொடுத்து விஷால், சதீஷ் என்ற பாலசிவாஜி, பிரசன்னா ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, விஷாலின் காதலியான கல்லூரி மாணவி சிறுமி வீட்டருகே இருப்பதால், பலமுறை பாட்டியிடம் பொய் கூறிவிட்டு சிறுமியை வசந்த் கிரிஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் அழைத்துச் செல்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியை ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி பல நாட்களாகப் பள்ளிக்குச் செல்லாததால், பள்ளி மாணவி ஒருவர் சிறுமியின் பாட்டியிடம் கூறியதால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிறுமியைக் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சிறுமியைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் கல்லூரி மாணவி ஒருவரை இந்த வழக்கில் சேர்க்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:தினமும் ஓசியில் பிரியாணி கேட்பதாக திமுக நிர்வாகி மீது புகார்

Last Updated : Mar 3, 2022, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.