சென்னை: பல்லாவரம் அடுத்த திரிசூலம் மங்கள விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காளியப்பன் (22). இவர் திரிசூலம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியினை ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகே 11 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்த காளியப்பன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்போது, சிறுமியின் பெற்றோர் திடீரென வீட்டுக்கு வந்ததும் செய்வதறியாது, அவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோரிடம் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காளியப்பன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த கும்பல் - போலீஸ் விசாரணை