ETV Bharat / state

"திரெளபதி பட பாணியில் மோசடி" - வங்கி பெண் அதிகாரி கண்ணீர் மல்க புகார்! - காவல் ஆணையர் குமார்

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை மற்றும் பல லட்சம் மோசடி செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வங்கி அதிகாரியான இளம்பெண் மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 3, 2023, 8:23 AM IST

சென்னை: மதுரையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை தி.நகரில் உள்ள தனியார் வங்கி பயிற்சி மையத்தில் பயின்றுள்ளார். அப்போது அதே பயிற்சி நிறுவனத்தில் பயின்று வந்த சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்ணை தாயை போல ஒப்பிட்டு ராஜூ பேசி காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனிடையே ஒரு நாள் ராஜூ இந்த பெண் வீட்டிற்கு இரவில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்து சென்ற போது, இதனை பார்த்த பெண்ணின் கணவர் ராஜூவை அடித்து விரட்டி அனுப்பி உள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனால் அந்த பெண் ராஜுவிடம் பேசுவதை தவிர்த்து பெங்களூருவுக்கு பணி சம்மந்தமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக நண்பர்கள் கூடும் போது அந்த பெண் வருவதை அறிந்து கொண்ட ராஜூ மீண்டும் அந்த பெண்ணை சந்தித்து, "காலம் கடக்கலாம் ஆனால் என் காதல் ஒரு போதும் அழியாது" என ஆசைவார்த்தை கூறி உங்களை காதலிக்கின்றேன் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என தெரிவித்து பழக ஆரம்பித்துள்ளார்.

மேலும், ராஜூவின் குடும்பத்தினரும் அந்த பெண்ணிடம் பேசி தனது மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளனர். நாளடைவில் வேறு வழியின்றி அந்த பெண்ணும் ராஜூவை காதலிக்க ஆரம்பித்துள்ளார். 2021ஆம் ஆண்டு கரோனோ காலக்கட்டத்தில் தனது பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவ செலவுக்கு பணம் இல்லை என கூறி ராஜு சிறுக சிறுக பணமாக 30 லட்சம் ரூபாயும், 30 பவுன் நகையாகவும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து பல ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண் ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்டப்போது பல காரணங்களை கூறி அலைக்கழித்த ராஜூ, பின்னர் மதத்தை காரணம் காட்டி தள்ளிவைத்த போது மதம் மாறுவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் விசாரிக்கும் போது, ராஜூவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து 2022ஆம் ஆண்டு பெண் குழந்தையும் பெற்றெடுத்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அப்பெண் ராஜூவின் வீட்டிற்கு சென்ற கேட்ட போது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பெண்ணை தாக்கியுள்ளனர்.

காயமடைந்த பெண் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்பு வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஏமாந்த இளம்பெண் நியாயம் கேட்டு மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம் புகார் அளித்துள்ளார்.

குறிப்பாக தன்னை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை ராஜூவிடம் கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும், ராஜூவிடம் நெருக்கமாக பேசிய ஆடியோ மற்றும் கருகலைப்பு ஆவணத்தையும் மகளிர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தனக்கு நீதி வேண்டும் எனவும் இது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது எனவும் கண்ணீரோடு கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சரிடம் எதிர்ப்பை பதிவு செய்த தன்னாட்சி கல்லூரிகள்: பொதுபாடத் திட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.