சென்னை அண்ணா நகர் நடுவாங்கரை மூவேந்தர் நகரில் தனது கணவருடன் வசித்து வருபவர் லட்சுமி (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அண்ணா நகரில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று (பிப்.05) வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் செல்போனில் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமி உடனடியாக சத்தமிட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தனர்.
இதையடுத்து, அவரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இளைஞர் அதே தெருவைச் சேர்ந்த நிர்மல் குமார் (20) என்பதும், தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போலி மணல் தயாரித்து விற்ற ஐந்து பேர் கைது!