சென்னை: தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சி பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் முருகன் (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் மூன்று நாள்களுக்கு முன்பு அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, அவரது நண்பர்களை பார்க்க சென்றார்.
அப்போது பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் முருகன் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் பின்பக்கமாக வந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சேலையூர் காவல் துறையினர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து இரண்டு நாள்களாக மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மப்பேடு பகுதியைச் சேர்ந்த டில்லி கனேஷ் (18) என்வரை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரளியாற்றில் குளித்த 2 பேர் நீரில் மூழ்கி பலி