ETV Bharat / state

கஞ்சா போதையில் பக்கத்து வீட்டிற்குள் புகுந்த இளைஞருக்கு தர்ம அடி! - சென்னை கஞ்சா போதையில் பக்கத்து வீட்டிற்குள் புகுந்த வாலிபர் கைது

சென்னை: அசோக் நகர் அருகே கஞ்சா போதையில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர்
author img

By

Published : Oct 22, 2019, 1:58 PM IST

சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் கைலாசம். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் லலிதா(35). கைலாசம் நேற்றிரவு ஆட்டோ ஓட்டச் சென்றபின், லலிதா தனது மகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

தனியாக இருந்த லலிதாவின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா போதையில் ஒரு இளைஞர் வந்துள்ளார். அவரைக் கண்ட லலிதா அச்சத்தில் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் புகுந்த இளைஞனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்பு, அந்த இளைஞனை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆய்வாளர் விஜயரங்கன் நடத்திய விசாரணையில், அந்த இளைஞன் அதே பகுதியச் சேர்ந்த பிரகாஷ்(20) என்பது தெரியவந்தது.

கஞ்சா போதையில் இருந்த பிரகாஷ் மீது ஏற்கனவே அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : போதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை! மகள் மாயமானதால் தாய் தற்கொலை முயற்சி!

Intro:Body:கஞ்சா போதையில் பக்கத்து வீட்டிற்குள் புகுந்த வாலிபர் கைது. 

அசோக் நகர் அம்பேத்கர் குடிசையில் வசித்து வருபவர் கைலாசம் ஆட்டோ டிரைவர்.
இவரது மனைவி லலிதா( வயது35).
கைலாசம் நேற்று இரவு ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார்.
லலிதா தனது மகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரை கண்டு அதிர்ச்சி அடைந்த லலிதா  கூச்சலிட்டார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அந்த  மர்ம நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து எம்ஜிஆர் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் நடத்திய விசாரணையில் அவன் அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்( வயது20 )என்பது தெரிந்தது கஞ்சா போதையில் இருந்த பிரகாஷ் மீது ஏற்கனவே அசோக் நகர் மகளிர் , காவல் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.