ETV Bharat / state

செமிகண்டக்டர் கொள்கையால் என்ன லாபம்? - என்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா? - தமிழக முதலீட்டாளர் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. 6.6 லட்சம் கோடி முதலீட்டுக்கான உறுதியை பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் 26.9 லட்சம் கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் சிறப்பம்சமாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செமிகண்டக்டர் கொள்கை பார்க்கப்படுகிறது. இது வேலை வாய்ப்பு சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து விரிவாக விளக்குகிறார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன்.

Semi Conductor
Semi Conductor
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 8:37 PM IST

Updated : Jan 9, 2024, 6:32 AM IST

ஐதராபாத்: " உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளில் நாங்கள் வெளியிட்ட செமிகண்டக்டர் கொள்கை, இத்துறையில் முதலீடுகளை மேலும் ஈர்த்து, வளர்ச்சியை துரிதப்படுத்தும்" இது சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது. செமிகண்டக்டர்கள் என்றால் என்ன? இதற்கு ஏன் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து தனியாக கொள்கை வெளியிடுகிறது? இது படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் எழக்கூடும்.

செமிகண்டக்டர் என்றால் என்ன?: செமிகண்டக்டர் என்பவை மின்சாரத்தை தன்வழியாக அனுமதிக்கும் உலோகங்களுக்கும், மின்சார பாய்ச்சலை தடுக்கும் ரப்பர் போன்ற பொருட்களுக்கும் இடைப்பட்ட ஒரு தன்மை உடையவை. தனித்துவமான இந்த தன்மையால், குறைந்த மின்சாரத்தை கடத்தும் தேவை கொண்ட மின்னணு சாதனங்கள் வடிவமைப்பில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் அனைவரின் கைகளில் இருக்கும் செல்போன் தொடங்கி, மின்சார கார்கள், விமானங்கள் வரை செமிகண்டக்டர்கள் இல்லாத சாதனங்களே கிடையாது.

செமிகண்டக்டர் உற்பத்தி முக்கியத்துவம் பெறுவது ஏன்?: 2019ஆம் ஆண்டு கொரோனாவுக்கு பிந்தைய கால கட்டத்தில் உலகத்தின் இயக்கத்தில் டிஜிட்டல் தன்மை தவிர்க்க இயலாததாகிவிட்டது. அதிகப்படியான தேவை, புதிய கண்டுபிடிப்புகளுக்கும், அதிக அளவிலான மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்கும் வழி வகுக்கிறது. உலக வர்த்தகத்தில் 20 விழுக்காடு மின்னணு சாதனங்கள் மூலமே நடைபெறுகிறது என்பது தான் இன்றைய நிலை.

தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி: தேசிய அளவில் என்றுமே மின்னணு சாதனங்கள் தயாரிப்புக்கான கேந்திரமாக (HUB) தமிழ்நாடு விளங்குகிறது. சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி மதிப்பு 2020-21ம் நிதியாண்டில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் , 2022-23ம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இது கிட்டத்தட்ட 223 சதவீதம் அதிகம், மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடு தான். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் எலக்ட்ரானிக் சாதன ஏற்றுமதியில் 40 சதவீதத்தை தமிழ்நாடு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது புதிய கொள்கையின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய அளவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது.

வேலைவாய்ப்புக்கு உதவுமா?: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய செமிகண்டக்டர் கொள்கை முதலீடுகளை ஈர்ப்பதோடு, திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் குறிப்பிடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் சிப்-கள் ஆராய்ச்சி மையங்களை நிறுவும் நிறுவனங்கள் சம்பளம் வழங்குவதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் முதல் வருடத்தில் 30 சதவீதமும், 2 வது வருடத்தில், 25 சதவீதமும், 3வது வருடத்தில் 20 சதவீதமும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையை மானியமாக தமிழ்நாடு அரசு முதலீட்டாளர்களுக்கு வழங்கும். அதிகபட்ச சம்பளமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து முடிவுகளும், தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சீரான, பரவலான வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்ற விதமாக, இந்த முதலீடுகள் எல்லாம், மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாடு ஒன் டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கின்ற மாநிலமாகவும் சிறந்திட, பெரும் இலட்சிய இலக்கை நிர்ணயித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இந்த இலக்கை விரைவில் அடைந்திட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை" என கூறினார். எனவே சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்வதும் அரசின் நோக்கமாக உள்ளது.

முன்னதாக ஈடிவி பாரத்துக்கு பிரத்தியேகமாக தகவல் அளித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா, தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் தொழில் செய்வதற்கும், தொழில் பூங்காக்கள் அமைக்க அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கி வளர்ச்சி அடைய ஒரு சிறப்பான சூழலும், திறமையான மனித வளங்களும் இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என கூறினார்.

தமிழ்நாடு அரசின் திறன்மேம்பாட்டு திட்டமான "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம், எதிர்கால தொழில் வளர்ச்சிகளை கவனத்தில் கொண்டு மாணவர்களுக்கான பயிற்சிகளை திட்டமிட்டு வருவதாகவும் கூறினார். இதன் மூலம் பள்ளியிலிருந்தே திறன்மிகு மனித வளத்தை உறுதி செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை கொள்கை மூலம், வரும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனவும் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி அவர்களிடம், செமிகண்டக்டர் கொள்கை உருவாக்கப்போகும் மாற்றங்கள் குறித்து அறிவதற்காக ஈடிவி பாரத் கேள்வி எழுப்பியது இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவிற்கு செமிக்கண்டக்கடர் கொள்கை முக்கியமானது.

நாம் பயன்படுத்தும் மொபைல், மைக் உள்ளிட்ட எல்லாவற்றிலும் செமிக்கண்டக்டர் இருக்கிறது. இந்தியாவே மிகப்பெரும் நுகர்வோர் சந்தையாகவும் உள்ளது. இந்தியாவின் செமிகண்டக்டர் கொள்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கொள்கையும் தெளிவான திட்டமிடலுடன் இருப்பதால், அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் பெருகும் என கூறினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் முதலீடு என்பதையும் தாண்டி இளைஞர்களுக்கு அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் நிறைவு பெற்று உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கு சிறந்த முதலீட்டையும் தொழில் வளர்ச்சியையும் பெற்றுத் தரும் பட்சத்தில் அனைவராலும் வரவேற்கக் கூடியதே.

இதையும் படிங்க : 6.64 லட்சம் கோடி முதலீடுகள்; 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Last Updated : Jan 9, 2024, 6:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.