ETV Bharat / state

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில் பட்டம் பட்டயம் சான்றிதழ் படிப்புகளுக்கு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1 தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 22, 2022, 9:44 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகளான பட்டப் படிப்பு, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்களும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 22,200 இடங்கள் என 24 ஆயிரத்து 736 இடங்கள் உள்ளன. டிப்ளமோ நர்சிங் படிப்பில் உள்ள 2,060 இடங்கள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 8,596 இடங்களும் உள்ளன.

மா.சுப்பிரமணியன்

இந்த இடங்களில் சேர்வதற்காக கடந்த ஆண்டு 81 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு ஏன் போராடவில்லை - செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.