ETV Bharat / state

'சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸுக்கு எல்லாம் தயார்; 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கை'

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, ஊட்டி ஆகிய நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

WTA
WTA
author img

By

Published : Sep 11, 2022, 9:05 PM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நாளை(செப்.11) தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அதில், 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் போட்டியை நடத்துவதற்காக 5 கோடி ரூபாயும், இங்குள்ள விளக்குகளை மாற்றி அமைப்பதற்காக மூன்று கோடி ரூபாயும், விளையாட்டு அரங்கை புதுப்பிப்பதற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.

நாளை தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிற அனைத்துப் போட்டிகளையும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் இந்த போட்டியைக் காண உள்ளதாகவும், வெளி மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களும் இந்தப்போட்டியை இலவசமாக காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் டென்னிஸ் பயிற்சி அளிப்பது தேவையான உபகரணங்களை வழங்குவது ஆகிய முயற்சிகளில் ஈடுபட தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தலைவர் அமிர்தராஜ் முன் வந்திருக்கிறார். இந்த சர்வதேச போட்டிக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளிலும் டென்னிஸ் வீரர் வீராங்கனைகளை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆர்.கே. நகர் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச்சண்டை மைதானம் அமைப்பதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டதைத்தொடர்ந்து, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சியோடு இணைந்து அந்த பகுதியை ஆய்வு செய்து, சென்னை மாநகராட்சி மூலமாக விரைவில் குத்துச்சண்டை மைதானம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, ஊட்டி ஆகிய நான்கு இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளுக்குத்தேவையான விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 27 விளையாட்டு சங்கங்கள் உள்ளன, அதில் ஒரு சில சங்கங்களில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும்.

நாளை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர், தேசிய அளவில் மற்றும் உலக அளவில் வெற்றி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு சுமார் பதினாறு கோடி ரூபாயை பரிசுத்தொகையாக வழங்க உள்ளார்" எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:குறைந்த வயது, இளம் வயது நாய்களை பிடிக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.