ETV Bharat / state

உலக அழகு தினம் - மனிதத்தின் வித்து! - annai terasa

உலக அழகு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொருவரும் தங்களைப் பொறுத்தவரையில் இந்த உலகில் எவையெல்லாம் அழகு என்பதை #Internationalbeautyday என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

உலக அழகு தினம்
உலக அழகு தினம்
author img

By

Published : Sep 9, 2021, 7:30 AM IST

Updated : Sep 9, 2021, 7:51 AM IST

அழகு... மூன்றெழுத்தில் பிரபஞ்ச உயிர்களின் ஈர்ப்பை உணர்த்தும் சொல். பார்க்கும் விதத்தைப் பொறுத்து, யாவும் அழகே. இயற்கையின் அருட்கொடைகளுக்கு நிறம், சூழல், சாதி எனக் கடிவாளம் போட்டு அழகை ரசிக்கிறது ஓர் கூட்டம். ஓர் பார்வையற்றவன் சக மனிதனுள் அழகு எனக் காண்பது மனிதத்தையே.

மனிதம், கனிவு ஆகிய உயர்ந்த அழகிய பண்புகளே ஒருவரை உயர்த்தும் என்பதற்குச் சான்றே அன்னை தெரசா. பிறர் பசியாறுவதைக் கண்டு இன்பம் கண்ட அவரின் புகழ் மனிதன் வாழும் மட்டும் மறையாது.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' எனத் தாவரங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வள்ளலாரின் பார்வையும், மனப்பான்மையும் அழகே!

ஒப்பீடு தரத்தை உருவாக்கி, தாழ்வு மனப்பான்மையை உயர்த்தும் புற அழகு நிலையற்றது என்பதை அறியும் காலத்திலேயே இங்கு மனிதம் செழிக்கும், அழகு நிலைக்கும்.

இந்நிலையில் உலக அழகு தினமான இன்று (செப்டம்பர் 9), ஒவ்வொருவரும் தங்களைப் பொறுத்தவரையில் எவையெல்லாம் அழகு என்பதைத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் #Internationalbeautyday என்ற ஹேஸ்டேக் மூலம் பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: HBD ரியாஸ் கான் - கட்டதுரைக்கு கட்டம் இப்போ சூப்பரோ சூப்பர்!

Last Updated : Sep 9, 2021, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.