இன்று உலக நிமோனியா தினம்.. கடுமையான சுவாச தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக நிமோனியா தினம் முதல் முறையாக நவம்பர் 2, 2009 அன்று அறிவிக்கப்பட்டது.
நிமோனியா என்றால் என்ன?
நிமோனியார் நுரையீரலைத் தாக்கும் கடுமையான சுவாசநோய் தொற்றாகும். மேலும் தொற்று பாதிப்புகளால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் வீக்கமடைவதால் நிமோனியா ஏற்படுகிறது.
நிமோனியாவின் அறிகுறிகள்
- சுவாசிக்கும்போது ஆழமாக இருமல் அல்லது மார்பு வலி.
- இரத்தம் தோய்ந்த சளி
- குறைந்த ஆற்றல் உணர்வு, மற்றும் பசியின்மை
- நடுக்கம், குளிர் மற்றும் காய்ச்சல்
- விரைவான, ஆழமற்ற சுவாசம்
- குறைந்த உடல் வெப்பநிலை
- மூச்சு திணறல்
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் இந்நோய் பெரியவர்கள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கூட பாதிக்கும் தன்மை அதிகம் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் கூட ஏற்பட நேரும்.
இதையும் படிங்கா: மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் வராமலிருக்க என்ன சாப்பிடலாம்?