சென்னை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (நவ.19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளிக்கு இடையே இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
-
Congratulations to Australia on a magnificent #WorldCup victory! 🏆
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Kudos to #TeamIndia for a spirited run to the finals, showcasing unbeatable form till the semis. Your resilience and passion were truly commendable! 🏏👏 #WorldCupFinal2023 #INDvAUS
">Congratulations to Australia on a magnificent #WorldCup victory! 🏆
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023
Kudos to #TeamIndia for a spirited run to the finals, showcasing unbeatable form till the semis. Your resilience and passion were truly commendable! 🏏👏 #WorldCupFinal2023 #INDvAUSCongratulations to Australia on a magnificent #WorldCup victory! 🏆
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023
Kudos to #TeamIndia for a spirited run to the finals, showcasing unbeatable form till the semis. Your resilience and passion were truly commendable! 🏏👏 #WorldCupFinal2023 #INDvAUS
இதில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்தே அசாத்திய ஃபீல்டிங்கில் இந்திய அணிக்கு டஃப் கொடுத்தது. இதையடுத்து 240 ரண்களில் இந்திய அணியை ஆட்டமிழந்தது. 241 எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நிலைகுலைந்தாலும், பின்னர் சுதாரித்து அபாரமாக விளையாடியது.
இறுதியாக 43 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
அவரது தனது X வலைத்தளப் பக்கத்தில், "உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அரைஇறுதி போட்டி வரை தனது அசாத்திய விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு எனது பாராட்டுக்கள்.
-
Come on #INDIA! Make it three.#WorldCupFinal2023 #INDvAUS pic.twitter.com/p6dGNQ9DT5
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Come on #INDIA! Make it three.#WorldCupFinal2023 #INDvAUS pic.twitter.com/p6dGNQ9DT5
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023Come on #INDIA! Make it three.#WorldCupFinal2023 #INDvAUS pic.twitter.com/p6dGNQ9DT5
— M.K.Stalin (@mkstalin) November 19, 2023
போட்டிக்கான உங்களுடைய நெகிழ்ச்சி மற்றும் ஆர்வம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இந்திய வீரர்களுக்கு ஆறுதல்!