ETV Bharat / state

India Vs Australia: மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு..! டிக்கெட் காட்டுனா ஃப்ரீ டிராவல்! எப்புடி இருக்கு அறிவிப்பு! - மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 10:47 PM IST

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டமானது இந்திய நேரப்படி, மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவின் முதல் ஆட்டத்தை காண்பதற்கு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் சென்னையை நோக்கி படை எடுத்து உள்ளனர். இதற்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail Limited) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (Tamil Nadu Cricket Association) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி இரவு நேரத்தில், (போட்டி முடித்து செல்லும் போது மட்டும்) மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீல வழித்தடம்: பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி ரயில்கள் இயக்கப்படும்.

பச்சை வழித்தடம்: புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகள்.. சென்னைவாசிகள் கவனிக்க வேண்டியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.