சென்னை : தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமானதை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், தாழ்வான பகுதிகள் மற்றும் பொதுவெளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை 2000 களப்பணியாளர்கள் கொண்டு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் 15 கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலகமும் 30 உதவி பொறியாளர்கள் தாழ்வான பகுதிகள் மற்றும் மழை நீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள குடிநீர் வழங்கல் துறை அமைத்துள்ளது.
மழைநீர் அகற்றும் பணியில் 57 எண்ணிக்கையிலான நீர் உறிஞ்சும் வாகனங்கள் கழிவு நீர் செல்லக்கூடிய பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 162 எண்ணிக்கையிலான ஜெட்ராடிங் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.
தொடர்ந்து கழிவு நீர் குழாய்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய் இணைப்புகளில் ஏற்படும் அமைப்புகளை சரி செய்ய ஏதுவாக 252 எண்ணிக்கையிலான தூர்வாரும் ஆட்டோக்கள் என மொத்தமாக 501 கழிவுநீர் இயந்திரங்கள் வாகனங்கள் மழை நீர் மற்றும் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட வருகிறது. மேலும் மழை நீர் மற்றும் கழிவு தொடர்பான புகார்களை 1916, 044- 456746 567 தெரிவிக்கலாம் என குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் நேரு