ETV Bharat / state

'நியமனம் பெறாத 10 ஆயிரம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும்' - காவலர் பணியிடங்கள்

சென்னை: காவலர் தேர்வில் வெற்றிபெற்று நியமனம் பெறாத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பணி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நியமனம் பெறாத 10 ஆயிரம் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் - மரு. ராமதாஸ் கோரிக்கை

author img

By

Published : Aug 1, 2020, 3:16 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு காவல் துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கரோனா பரவல் அதிகமுள்ள காலத்தில், காவலர் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், புதிய வாய்ப்புகளை அரசு ஆராய வேண்டும்.

ஏற்கனவே காவலர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பணி நியமனம் பெறாதவர்களைப் புதிய காலியிடங்களில் நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

10 மாதங்கள் நடைபெற்ற உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8,773 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தவிர மேலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் வெற்றி பெற்றிருந்தனர்.

அவர்களின் பெயர்கள் தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தன. ஆனாலும், அந்த நேரத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 8,773 என்ற அளவில் மட்டுமே இருந்ததால், அந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தரவரிசையில் இடம்பெற்றிருந்த மீதமுள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழ்நாடு காவல் துறையில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் காவலர்களின் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பாக கரோனா நெருக்கடி காலத்தில் ஊரடங்கை நிர்வகிக்கவும் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் தேவைப்படுகின்றனர்.

அதனால்தான் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் இருந்த இரண்டாம் நிலைக் காவலர்களை, பயிற்சி முடிவடைவதற்கு முன்பே களப்பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபடுத்தியது.

இன்றைய சூழலில் காலியாக உள்ள 10,000 பணியிடங்களை உடனடியாக நிரப்புவது சாத்தியமில்லை. அதற்கு கரோனா பரவல் அச்சம் இடம் கொடுக்காது. அதுமட்டுமின்றி, நிலைமை சீரடைந்து அடுத்த காவலர் தேர்வு நடைபெறும்போது, இவர்களில் பலர் அதிகபட்ச வயது வரம்பைக் கடந்து விடுவார்கள். அதனால், அவர்களுக்கு ஒருவாய்ப்பு வழங்க வேண்டும்.

எனவே, ஏற்கனவே உடற்தகுதித் தேர்விலும், எழுத்துத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ள 10 ஆயிரத்துக்கும் கூடுதலான இளைஞர்களை நேரடியாக காவலர் பணியில் நியமிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.