ETV Bharat / state

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாது - மத்திய அரசு - central assurance in EIA act

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

Won’t implement coercively EIA act in nation, central assurance, MHC

author img

By

Published : Aug 19, 2020, 2:15 PM IST

இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என்றும், அதுவரை வரைவு அறிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரியும் மீனவர் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தமிழில் தயாராக இருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் வழக்கறிஞர், சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாகவே வரைவு அறிக்கைக்கு பிற உயர் நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளதால், அதன் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட மத்திய அரசு வழக்கறிஞர், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவைப் பொறுத்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி, விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.