ETV Bharat / state

S Ve Shekher: எஸ்.வி சேகருக்கு எதிரான வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணையில் தலையிட முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறாக கருத்து தெரிவித்ததாக பாஐக நிர்வாகி எஸ்.வி சேகர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Women journalists defamation case Madras High Court dismissed SV Shekhar petition

author img

By

Published : Jul 14, 2023, 10:59 AM IST

Updated : Jul 14, 2023, 11:12 AM IST

சென்னை: கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான வன் கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் யூ-டியூபில் வீடியோ வெளியிட்டதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏவான எஸ்.வி சேகர் மீதான இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் மிகவும் வருத்தம் கோரியிருந்ததாக வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, தவறான மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்துவிட்டு, உடனடியாக மன்னிப்பு கோரிவிட்டால், தனது செயல்பாடுகளில் தவறில்லை என்றாகிவிடுமா? என எழுப்பி, ஜூலை 10-ஆம் தேதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 14) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, எஸ்.வி சேகருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் தலையிட முடியாது. விசாரணையை தொடர்ந்து நடத்தலாம். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை
எப்படி திரும்ப பெற முடியாதோ? அதேபோல ஒருமுறை ஒருவர் தெரிவித்த கருத்துக்களை தவறானது என்றாலும் திரும்ப பெற முடியாது.

ஒரு கருத்தின் விளக்கமும், அர்த்தமும் தெரியாமல் யாருக்கும் அனுப்பவோ? பகிரவோ? முடியாது. நீதிமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்ததால் தேசிய கொடியை அவமதித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் ரத்து செய்யப்படுகிறது. பத்திரிக்கையாளர் குறித்து கருத்து தெரிவித்ததற்கான விசாரணையை சிறப்பு நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும். விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: Vande Bharat Express: சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

Last Updated : Jul 14, 2023, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.