சென்னை: பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் சென்னை (CHENNAI SAFE CITY FOR WOMEN) என்ற தலைப்பில் பெண் காவலர்கள், பெண்கள், சிறுமிகள் இணைந்து ‘மகளிர் சைக்கிள் பேரணியை’ (Women Cycle Rally) நேற்று முன்தினம் (செப். 25) இரவு நடத்தினர்.
இதனை மயிலாப்பூர் துணை ஆணையர் திஷாமிட்டல், கல்வி துணை ஆணையர் சினேகா இருவரும் கொடி அசைத்து தொடங்கிவைத்தர். இந்தச் சைக்கிள் பேரணியில் பெண் காவலர்கள், பெண்கள், சிறுமிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் ,“child help line 1098, women help line 1091” என்ற பதாகைகள் ஏந்திக் கொண்டு சென்றனர்.
சைக்கிள் பேரணி
மெரினா, காந்தி சிலை அருகில் தொடங்கப்பட்ட பேரணி, போர் நினைவுச் சின்னம், சென்ட்ரல் ரயில் நிலையம், அமைந்தகரை ஸ்கைவாக், நுங்கம்பாக்கம், ஜெமினி மேம்பாலம், ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மீண்டும் காந்தி சிலைக்கு வந்து முடிவடைந்தது.
இதற்கு முன்பாக செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல், “சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
வன்முறை என்பது ஒரு தீர்வாகாது. பெண்கள் சுந்திரமாகச் செயல்பட வேண்டும். அதுதான் முக்கிய நோக்கம். குறிப்பாக பொது இடங்களிலும், சாலை, பார்க், தெருக்களில் சொல்லும் பெண்கள் தைரியமாக இருப்பதற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமாக உள்ள பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’ரயில்வே பணி நியமன உத்தரவை திரும்பப் பெறுக’ - சு. வெங்கடேசன் எம்பி