ETV Bharat / state

ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதுபோல் நடித்து, கொள்ளையடிக்கும் பெண்கள்: திணறும் காவல்துறை!

சென்னை: ஆட்டோவில் லிஃப்ட் கொடுப்பதுபோல் நடித்து, ஆட்டோவில் வரும் முதியவர்களிடம் திருடிச் செல்லும் பெண்களைப் பிடிக்க முடியாமல் சென்னை காவல்துறை திணறிவருகிறது.

Women Cheating in Auto in the name of lift to Old People
Women Cheating in Auto in the name of lift to Old People
author img

By

Published : Nov 30, 2019, 8:26 AM IST

சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் தனியாக இருக்கும் வயதான பெண்களை குறிவைத்து நகைகளை நூதனமாக திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் தனியாக நிற்கும் வயதான பெண்களிடம் ஆட்டோவில் வரும் மூன்று பெண்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற கேட்டு தாங்கள் அந்தப் பகுதி வழியாக செல்வதாக கூறி அவர்களுக்கு லிப்ட் கொடுப்பார்கள். வயதான பெண்களும் அவர்களின் பரிவான வார்த்தைகளை நம்பி ஆட்டோவில் ஏறிச்செல்வர்.

ஆட்டோவில் முதியவர்களுடன் பயணம் செய்யும் மூன்று பெண்களில் இருவர் நடுத்தர வயதினராகவும், ஒருவர் கல்லூரி மாணவி போலவும் உடையணிந்திருப்பர் எனவும், பயணத்தின்போது முதியவர் அணிந்திருக்கும் நகைகளைப் பற்றி விசாரித்து நகை அறுபடும் நிலையில் இருப்பதாக கூறி பத்திரமாக பையில் கழற்றி வைத்து கொள்ளுமாறு கூறுவார்கள் எனக் கூறப்படுகிறது.

முதியவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், ஆட்டோவிற்கான கட்டணத்தையும் வேண்டாமென்று கூறி சென்று விடுவர். இறங்கிய பின் பையை சோதித்து பார்த்த பிறகே தங்கள் பையில் நகை இல்லாததையே கண்டறிவார்கள். ஆட்டோவில் உடன்வந்த பெண்கள் நாடகமாடி நகையை திருடியிருப்பது பின்னரே தெரியவரும்.

நகையைப் பறிகொடுத்த ரெங்கநாயகியின் மருமகள்

இது போன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினமும் இதே போன்று ரெங்கநாயகி(70) என்ற வயதான பெண்மணியை ஏமாற்றி 3 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் தாட்சாயிணி(65) என்ற பெண்மணிடம் 4 சவரன் நகையை இதே பாணியில் திருடிச் சென்றுள்ளனர். ஏற்கனவே ஜனவரி மாதம் அபிராமபுரம் பகுதியில் கஸ்தூரி என்ற மூதாட்டியிடம் 5 சவரன் நகையை திருடிச்சென்றுள்ளனர். அதே போன்று கடந்த மாதங்களில் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளது..

இந்த ஆண்டில் மட்டும் 5 சம்பவங்கள் இதேபோன்று இந்த கும்பலால் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோவில் வந்து லிப்ட் கொடுத்து கொள்ளையடிக்கும், ஆட்டோ பெண்களைப் பிடிக்க முடியாமல் சென்னை காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இதையும் படிங்க: எல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் திருடர்கள்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

Intro:Body:*ஆட்டோவில் வந்து முதியவர்களை குறிவைத்து திருடும் ஆட்டோ திருடிகள், பிடிக்க முடியாமல் திணறும் சென்னை காவல்துறை*

சென்னையில் முதியவர்களை குறிவைத்து ஆட்டோவில் வந்து சூழ்நிலைக்கேற்றார்போல் நாடகமாடி நகைகளை திருடிச் செல்லும் ஆட்டோ திருடிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் தனியாக வயதான பெண்கள் நின்றுகொண்டிருந்தால் அவர்களை குறிவைத்து நகைகளை நூதனமாக திருடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியாக நிற்கும் வயதான பெண்களிடம் ஆட்டோவில் வரும் மூன்று பெண்கள் எங்கு செல்ல வேண்டும் என்ற இடத்தைக் கேட்டு தாங்கள் அந்தப் பகுதி வழியாக செல்வதாக கூறி வயதான பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பார்கள். வயதான பெண்களும் அவர்களின் கருணை வார்த்தைகளில் நம்பி ஆட்டோவில் ஏறிக் கொள்வார்கள். ஆட்டோவில் பயணம் செய்யும் அந்த மூன்று பெண்களில் இருவர் திருமணம் ஆகியும் ஒருவர் கல்லூரி மாணவி போலவும் உடையணிந்து வருவார்கள். ஆட்டோவில் வயதான பெண் ஏறியவுடன், அவர் அணிந்திருக்கும் நகைகளை பற்றி விசாரிப்பார்கள். அதன் பின் அக்கரையாக பேசுவது போல் நகைகளை பத்திரமாக கழற்றி பையில் வைத்து கொள்ளுமாறு கூறுவார்கள். இல்லையெனில் நகை அறுபடும் நிலையில் இருப்பதாக கூறி பையில் கழற்றி வைத்து கொள்ளுமாறு கூறுவார்கள். வயதான பெண் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், அன்புடன் வயதான பெண்னை இறக்கி சென்று விடுவார்கள். அதற்காக காசு கூட வாங்க மாட்டார்கள். இறங்கிய பின்தான் வயதானவர்கள் பையை சோதித்து பின் தங்கள் பையில் நகை இல்லததையே கண்டறிவார்கள். ஆட்டோவில் வந்த கொள்ளைக்காரிகள் தான் நாடகமாடி நகையை திருடியிருப்பது பின்னர்தான் தெரியவரும். இது போன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றும் இதே போன்று ரெங்கநாயகி(70) என்ற வயதான பெண்ணிடம் ஏமாற்றி 3 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். அதேபோல இன்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் தாட்சாயிணி(65) என்ற பெண்ணிடம் 4 சவரன் நகையை இதே பாணியில் திருடிச் சென்றுள்ளனர். ஏற்கனவே ஜனவரி மாதம் அபிராமபுரம் பகுதியில் கஸ்தூரி என்ற மூதாட்டியிடம் 5 சவரன் நகையை திருடிச்சென்றுள்ளனர்.அதே மாதம் அயனாவரத்தை சேர்ந்த பத்மாவதி என்ற வயதான பெண்ணிடம் 7 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். மூன்றாவது சம்பவம் செப்டம்பர் மாதம் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவிலில் பூங்காவனம் என்ற மூதாட்டியிடம் 9 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் 5 சம்பவங்கள் இதேபோன்று இந்த ஆட்டோ திருடிகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது. மறுபுறம் ஆட்டோவில் வந்து லிப்ட் கொடுத்து கொள்ளையடிக்கும், ஆட்டோ திருடிகளை பிடிக்க முடியாமல் சென்னை காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

(பேட்டி - மாரியம்மாள் -
பாதிக்கப்பட்டவரின் மருமகள்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.