ETV Bharat / state

எஜமானரை கொலை செய்து கொள்ளை: தம்பதியினர் கைது

சென்னை: மாதவரத்தில் தாங்கள் வேலை பார்த்து வந்த வீட்டின் உரிமையாளரை கொலை செய்துவிட்டு பணம், நகைகளை கொள்ளையடித்த தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பணம் கொள்ளை அடித்த தம்பதியினர் கைது
பணம் கொள்ளை அடித்த தம்பதியினர் கைது
author img

By

Published : Mar 24, 2021, 7:05 AM IST

மாதவரம், பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (52). இவர் சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (47). ரவி தனது மனைவி கலைவாணிக்கு போன் செய்து எடுக்காததால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர், சந்தேகப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கலைவாணி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். மேலும், வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு சில நகைகள், பணம் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, ரவி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த தம்பதியினர் கலைவாணியை கொலை செய்தது தெரியவந்தது. குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தம்பதியினர் பெங்களூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள கே.ஆர் புரத்திலுள்ள குற்றவாளியின் வீட்டை நெருங்கி, அங்கே சுற்றி வளைத்து தம்பதியரைக் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த 30 பவுன் நகை, பத்தாயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்போது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கொலை நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த சிறப்புப் படையினரை காவல் துறை உயர் அலுவலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: 'ரூ.350 கோடி - விக்!' இது அவரு... ஆனா நம்மவரோட வாழ்க்கைமுறை வீட்டையே சீரழிக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.